• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இயற்கையை காப்போம் , தெற்காசிய மீனவஅமைப்பின் இந்திய செயலாளர் அருட்பணி சர்ச்சில் பேட்டி..,

தமிழ்நாட்டில் சமூக நீதிக்காகவும் தமிழ்நாட்டு மக்களின் சம உரிமைக்காகவும்
தமிழ்நாடு போராடும்… தமிழ்நாடு வெல்லும்…என்ற பார்ப்பதை வாக்கியத்தை முன்வைத்து களம் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்அவர்கள் குமரிமாவட்ட மக்களை இன்று நேரில் சந்தித்தார்.

ஒன்றிய அரசின் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் வரும் அழிவுத் திட்டங்களான
2827 ஏக்கர் நிலத்தில் அணுக்கனிமச் சுரங்கம் 9990 சதுர கி.மீ பரப்பளவில் வெட்ஜ் பாங்க் பகுதியில் ஆழ்கடல் எரிவாயு எண்ணெய் எடுக்கும் திட்டம் கொல்லம் முதல் மன்னார் வளைகுடா வரை கடலுக்குள் மணலைத் தோண்டி கனிமம் எடுக்கும் திட்டம்.
தனுஷ்கோடி முதல் கன்னியாகுமரி வரை கடலுக்குள் காற்றாலை திட்டம்
போன்ற நாசகாரத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் கன்னியாகுமரி அணுக்கனிமச் சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்க நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்துப் பேசினார்.

போராட்ட்குழு தலைவர் அருளானந்தம், ஒருங்கிணைப்பாளர் Fr.டன்ஸ்டன் இணை ஒருங்கிணைப்பாளர் Fr.சில்வெஸ்டர் குருஸ் துணைத்தலைவர் ஜாண்சன் செயலாளர் சுதர்சன் ஊடகப்பிரிவு செயலாளர் குறும்பனை பெர்லின் போராட்டக்குழு உறுப்பினர்கள் லத்தீப், நாகராஜன், ஜெயசுந்தரம் அழிக்கால் பங்குத்தந்தை Fr.டிக்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பட், இனிகோ இருதயராஜ் மற்றும் மேயர் மகேஷ், மீனவர் அணி மாநில செயலாளர் ஸ்டாலின்ஆகியோர் உடனிருந்தனர். தமிழ்நாடு அரசு தலைமைச்செயலாளர் முருகானந்தம் நிதி அமைச்சர் மாண்புமிகு. தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில், ஒன்றிய அரசின் இந்தத் திட்டததை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

போராடுகின்ற மக்களோடு அரசு எப்போதும் உடனிருக்கும். இத்திட்டங்களைக் கைவிடவேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி ஏற்கனவே கடிதம் எழுதி கண்டனத்தைத் தெரிவித்தோம். இத்திட்டங்களை கைவிடும்வரை மக்களோடு இருப்போம் என்று முதல்வர் அவர்கள் உறுதியளித்தார். தமிழ்நாடு அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி கூறி குமரி மக்கள் விடைபெற்றனர்.