• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

நவீன சிகிச்சை மைய கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த தமிழக முதல்வர்..,

ByP.Thangapandi

Jul 14, 2026

மதுரை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் சுமார் 3.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நவீன சிகிச்சை மைய கட்டிடங்களை இன்று சென்னையிலிருந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.,

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுமார் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, உசிலம்பட்டி எம்.எல்.ஏ விஜய், சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.,

அதனை தொடர்ந்து கட்டிடத்தில் உள்ள அடிப்படை வசதிகள், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினார்.,