முருகப்பா குழுமத்தின் 3 சக்கர மின்வாகனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் முருகப்பா குழுமம் சார்பில் மின்சார ஆட்டோவை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். மின்பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோ ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, அறநிலையத்துறை சார்பில் 18 கோயில்களில் ரூ.104.77 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டங்களை திறந்து வைத்தார். இதன்பின் 25 புதிய கட்டுமான பணிகளையும் தொடங்கி வைத்தார்.