

கோவில்பட்டி ஜீ.வி.என். கல்லூரியில் 1981 ம் கல்வியாண்டில் பி.எஸ்.சி. கணித பிரிவில் படித்த மாணவர்கள் சந்திப்பு. ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜீ.வி.என். கல்லூரியில் 1981 ம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கோவில்பட்டி சில்வர் ஸ்டோன் ரிசார்ட்டில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் பழைய மாணவரும், பாஜக மாவட்ட துணை தலைவரும், கழுகுமலை தொழிலதிபருமான எஸ்.பி. இராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கோமதிமனோகரன் முன்னிலை வகித்தார். ஆடிட்டர் வேலுச்சாமி வரவேற்றார். தொடர்ந்து பழைய மாணவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து அன்பு, ஒற்றுமையை பரிமாறிக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது-
நாங்கள் அனைவரும் கல்லூரியில் படித்த நாள் முதல் இன்று வரை ஒற்றுமையுடன் இருக்கிறோம். இக்கால மாணவ சமுதாயம் ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும். அவ்வாறு மதித்து நடந்தால் படிப்பு தன்னால் வரும். மேலும் நீட் தேர்வை அரசு ரத்து செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியில் அரசியல் தலையீடுகள் இருக்க கூடாது. மேலும் மாணவ மாணவிகள் செல்போன் மோகத்தால் மூழ்கி கிடக்கின்றனர். அவற்றில் இருந்து மீண்டு நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். மது பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. இவ்வாறு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினர். இதில் பேராசிரியர் ராஜாராம், தலைமையாசிரியர்கள் வீராசாமி, முத்துராமலிங்கம் மற்றும் பழைய மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
