இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய பணிகளை சென்னை தலைமை செயலகத்தில் வைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்.

இதில் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப் பள்ளியில் 8 வகுப்பறை கொண்ட கூடுதல் கட்டிடம் ரூ. 2 கோடியே 42 லட்சம் செலவில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இதில் குமரி மாவட்ட மண்டைக்காடு தேவசம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியல், மாவட்ட கலெக்டர் அழகு மீனா தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி வைத்தார்.
இணை ஆணையர் ஜான்சி ராணி, குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் முன்னிலை வைத்தனர். சூப்பிரண்டு சுப்பிரமணியன், மராமத்து பிரிவு பொறியாளர் ஐயப்பன், மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மேலாளர் செந்தில்குமார், ஸ்ரீகாரியம் ராஜசேகர், திமுக ஒன்றிய செயலாளர் பி எஸ் பி சந்திரா ஸ்ரீகாரியம் ராஜசேகர், பள்ளி தலைமை ஆசிரியர் சிவராம் உட்பட பலர் பங்கேற்றனர்.