

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் வீடு இல்லாதவர்களும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அரசு அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒதுக்கப்படுவதாக அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து இராஜபாளையம் தென்றல்நகர் அருகே வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூபாய் 80 கோடியை 74 லட்சம் மதிப்பில் 864 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டு தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஓராண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று முதற்கட்டமாக 100 வீடுகளை காணொளி காட்சி மூலம் தமிழ முதலமைச்சர் திறந்து வைத்தார். இதை அடுத்து இராஜபாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட வீடுகளை சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் குத்து விளக்கேற்றி குடியிருப்பில் குடியிருக்க போகும் முதல் 100 பேருக்கு அரசாணையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சீர் மறைவினர் நல வாரிய துணை தலைவர் ராஜா அருள்மொழி நகர செயலாளர் ராமமூர்த்தி பொதுக்குழு கனகராஜ் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் அரசு ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

