• Wed. Jan 22nd, 2025

முதல்வர் காரில் வந்து இறங்கினார்.. சென்றுவிட்டார்… அண்ணாமலை குற்றச்சாட்டு

பாஜக கட்சியினுடைய மாநில தலைவர் அண்ணாமலை இன்று கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மழையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த குளங்களை பார்வையிட்ட பின்னர் முகாம்களில் தங்கியிருந்த பொது மக்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது 1992 பின்பு ஒரு பேரிழப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் என்னுடைய வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு முதலமைச்சரின் நிவாரண அறிவிப்பு படி ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய், அதாவது ஒரு ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் என அறிவித்துள்ளார்.

நிவார் புயல் வந்த போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அன்று ஏக்கருக்கு 30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் இன்று அவர் முதல்வராக இருந்தபோது ஒரு ஏக்கருக்கு 8000 ரூபாய் தான் கொடுப்பேன் என்று அறிவித்துள்ளார்

இது எந்த வகையில் நியாயம் ? விவசாயிகள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தார். காரில் வந்து இறங்கினார், பார்த்தார் சென்றார். இறங்கி மக்களோடு பேசி அவருடைய கஷ்டங்களை புரியாமலே சென்றுவிட்டார் என குற்றம்சாட்டிய அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு காரணம் ஆக்கிரமிப்புகள் அதிகம் என்றும், தோவாளையில் மட்டும் பாதிக்கப்பட்ட இந்த குளம் 72 ஏக்கர் அளவில் இருந்தது. இன்று வெறும் 22 ஏக்கர் அளவில் குறுகி உள்ளது. மீதமுள்ள இடங்கள் எங்கே சென்றது என அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் ?.