• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வாக்களிப்பது குறித்து வீடியோவில் பாடிய தலைமைத் தேர்தல் ஆணையர்

Byவிஷா

Apr 5, 2024

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் நேர்மையாய் வாக்களிப்பது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹ_ வீடியோவில் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
ஒடிசாவை சேர்ந்த இவர், கடந்த 1997-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 2019 மக்களவை, 2021 சட்டப்பேரவை தேர்தல்களை நடத்தி முடித்ததில் இவரது பங்கும் உண்டு.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம், பணம் பெறாமல் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான பாடல் ஒன்றை சொந்த குரலில் ஆடியோவாக வெளியிட்டார். இதையடுத்து, தற்போது மக்களவைத் தேர்தல் நேரத்தில் ‘சிறகை விரித்து பறக்கும் பறவையினம்போல’… என தொடங்கும் அந்த பாடலை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இதில் ‘பணமேதும் வாங்காமல் மனசாட்சி சொல்படி வாய்மையாய், நேர்மையாய், தூய்மையாய் உன் வாக்கை செலுத்து நீ’’ என்று வாக்குக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தும் வரிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.