• Fri. Jan 17th, 2025

பறை இசை முழங்க வாள் ஏந்திய வீர மங்கை வேலுநாச்சியார், மருது பாண்டியர்கள் வேடமிட்டு நாம் தமிழர் கட்சியினர் வித்தியாசமான முறையில் பிரச்சாரம்

ByG.Suresh

Mar 26, 2024

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எழிலரசி இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக .நாம் தமிழர் கட்சியினர் திரண்டு பறை இசை முழங்க வாள் ஏந்திய வீர மங்கை வேலுநாச்சியார் மருது பாண்டியர்கள் வேடமிட்டு பேருந்து நிலையத்திலிருந்து அரண்மனை வாசல் வந்து அரண்மனைக்கு முன்பாக உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டு வாரச்சந்தை வீதி வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று வருகின்றனர்.