மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்து.
இந்நிலையில் நாக்பூர், வாரணாசி, டேராடூன், திருச்சி, இந்தூர், சென்னை, கோழிக்கோடு, கோயம்புத்தூர், புவனேஷ்வர் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் உள்ள மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படும் என்றும், மதுரை, திருப்பதி, ராஞ்சி, ஜோத்பூர், ராய்ப்பூர், ராஜமுந்திரி, வதோதரா, அமிர்தசரஸ், சூரத், ஹூப்ளி, இம்பால், அகர்தலா, உதய்பூர், போபால் மற்றும் விஜயவாடா ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களையும் தனியார்மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.