• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிபிஐ விசாரணை ஒரு தலைபட்சமானது

ByA.Tamilselvan

Jun 2, 2022

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு விசாரணையில் சிபிஐ விசாரணை ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக ஒரு தலைபட்சமானது என போராட்டக்குழு வழக்கறிஞர் பேட்டி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்டுள்ள 64 பேர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் வழக்கு விசாரணை – ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
சிபிஐ விசாரணை ஒரு தலைபட்சமானது – குற்றப்பத்திரிக்கையில் ஒரு காவல்துறையினரின் பெயர் கூட இடம்பெறவில்லை எனவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் எனவும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி.
தூத்துக்குடியில் 22.5.2018-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கனாது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள இறுதி குற்றப்பத்திரிகையில் 101 பேரில் ஏற்கனவே 27 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில் இன்று 74பேர் ஆஜராக சம்மன் அனுப்பபட்டது இதில் 64பேர் மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி பசும்பொன் சண்முகையா முன்பாக நேரில் ஆஜராகினர். இதனையடுத்து வழக்கில் ஆஜர்படுத்தப்பட்ட 64பேரும் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட து.பின்னர் வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்தவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசுகையில் : சிபிஐ விசாரணை ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக ஒரு தலைபட்சமானது எனவும், குற்றப்பத்திரிக்கையில் ஒரு காவல்துறையினரின் பெயர் இடம்பெறாமல் ,போராடிய பொதுமக்களை குற்றவாளிகளாக மாற்றியுள்ளனர் எனவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் எனவும், துப்பாக்கி சூடு தொடர்பாக நியமிக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும், சிபிஐ அறிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார் .