பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட விவகாரத்தில் ஐந்து நபர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மத்திய மாநில அரசுகளுக்கிடையே மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளும் கட்சி திமுகவினர் இன்று காலை பொள்ளாச்சி ரயில்நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த ஹிந்தி எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்தனர்.
இந்த விவகாரத்தில் அழிக்கப்பட்ட மூன்றே மணி நேரத்தில் பெயர் பலகையில் மீண்டும் ஹிந்தி எழுத்துக்களை ரயிவே துறை அதிகாரிகள் எழுதி உள்ளனர். மேலும் இது தொடர்பாக கோவை தெற்கு மாவட்ட சட்ட திட்ட குழு உறுப்பினர் செல்வராஜ், உள்ளிட ஐந்து நபர்கள் மீது ரயில்வே போலீஸ் அதிகாரிகள் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி நகர பாஜகவினர் பரமகுரு தலைமையில் ரயில்வே போலீசாரிடம் மனு அளித்துள்ளனர். நாளை சார் ஆட்சியரிடம் மனு அளிப்பதாக பாஜகவினர் தெரிவித்தனர்.