நத்தம் அருகே விவசாயின் வீட்டில் பூத்த வருடத்துக்கு ஒருமுறை இரவில் மலர்ந்து இரவிலேயே குவிந்து விடும் பிரம்ம கமலம் பூ.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடியது ‘நிஷாகந்தி’ எனப்படும் ‘பிரம்ம கமலம்’ பூ. சிவபெருமானுக்கு விருப்பமான மலராக கருதப்படுகிறது. மிகுந்த மணம் நிறைந்த இந்த பூ இரவில் பூத்து இரவிலேயே குவிந்துவிடும் தன்மை கொண்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோமணாம்பட்டியை சேர்ந்த அழகு மகன் மணிராஜா (வயது 35)y விவசாயி. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் சென்றிருந்தபோது அங்கு நண்பரின் வீட்டிலிருந்து பிரம்ம கமலம் பூவின் செடியை எடுத்து வந்து தனது வீட்டில் தொட்டியில் வளர்த்து வந்தார். இவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பிரம்ம கமலம் பூ இன்று இரவு பூத்தது. பூத்த சில மணி நேரத்திலேயே அந்த மலர் குவிந்து விட்டது. இதனைக் கண்ட மணிராஜாவின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் பிரம்ம கமலம் பூ மலர்ந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் இவரது வீட்டுக்கு வந்து பூவை பார்த்து சென்றனர்.
ஆண்டுக்கு ஒரு முறை அரிதாக பூக்கும் அபூர்வ பிரம்ம கமலம் பூ பூத்த நிகழ்வு அப்பகுதியில் உள்ளோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.