• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இளையான்குடியில் காதலி பேச மறுத்ததால் மின்கம்பியைப் பிடித்து இழுத்து உயிரை விட்ட காதலன்..!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் காதலி பேச மறுத்ததால் மின்சார கம்பியை பிடித்து இழுத்து காதலன் உயிரைவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இளையான்குடி இந்திரா நகரில் வசித்து வந்த இளைஞர் ரஃபிக் ராஜா என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இந்த காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஜூலை மாதம் வீட்டை விட்டு வெளியேறினார்.

பெண் வீட்டார் இளையான்குடி நிலையத்தில் புகார் அளித்ததால் காதலர் ரஃபிக் ராஜா மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இதையடுத்து சிறையில் இருந்து வந்த ரஃபிக் ராஜா மது அருந்திவிட்டு தன்னுடைய காதலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முயற்சித்து இருக்கிறார்.

ஆனால் காதலி பேச மறுத்தாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ரஃபிக் ராஜா வீட்டின் அருகே உயர் மின்னழுத்தம் செல்லும் மின் கம்பத்தின் மீது ஏறி மின்சார கம்பியை பிடித்து தொங்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


இளம் வயதில் காதலித்து சிறை சென்று, உயிரை விட்ட இளைஞரின் மரணம் அப்பகுதி மக்களிடையே சோகத்தில் ஆழ்த்தியது.