• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

பாம்பன் பாலத்தில் மோதி விசைபடகு உடைந்து கடலில் மூழ்கியது

பாம்பன் பாலத்தில் கடக்க முயன்ற விசைபடகு ஒன்று பாலத்தில் மோதி உடைந்து கடலில் மூழ்கியது. படகிலிருந்த மீனவர்களை பாம்பன் மீனவர்கள் விரைந்துசென்று மீட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலுள்ள பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து செல்ல முயன்ற, பாம்பன் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு ஒன்று படகின் மேற்பகுதி தூக்குபாலத்தின் மீது மோதியதால் உடைந்து பலத்த சேதம் ஏற்ப்பட்டது. இதனால், நிலைதடுமாறி பாலத்தின்மீது மோதி கடலில் மூழ்கியது.

பாம்பன் கடற்கரையில் மீன்பிடி படகுகளை பழுதுபார்த்துக் கொண்டிருந்த மீனவர்கள், படகு மூழ்கிய கண்டதும் விரைந்து சென்று படகிலிருந்த மீனவர்களை உயிருடன் மீட்டுள்ளனர். படகு முற்றிலும் சேதமாகி கடலுக்குள் மூழ்கியது.

இதுகுறித்து மீன்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் யாருடைய படகு, எப்படி பாலத்தின் மீது மோதியது என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.