தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகள் கேரளா திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஆட்சி காலத்தில் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.
இதனை நினைவுபடுத்தும் விதமாக குத்துக்கல்வலசை ரவுண்டானாவில் தமிழக அரசு சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முழு திரு உருவ சிலை அமைக்க வேண்டும் என்று இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவன தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின் ஆலோசனையின்படி, மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் அவர்கள் தலைமையில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன், செங்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், கடையநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், கடையநல்லூர் இளைஞரணி செயலாளர் பால்தங்கம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.