• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மேட்டூர் அணையின் உபரி நீரை ஏரிகளில் நிரப்ப கோரி விவசாயிகள் ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

சேலம் மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 120 அடியை எட்டும்போது கூடுதலாக வரும் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த ஆண்டு தமிழக அரசு 565 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தைக் கொண்டு வந்து தற்போது பகுதியளவு முடிந்துள்ளது. இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான மேட்டூர் சரபங்கா வெள்ள உபரிநீர் ஏற்ற திட்டத்தின் மூலமாக உடனடியாக விரைந்து 100 ஏரிகளை நிரப்ப வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காவிரி உபரி நீர் நடவடிக்கைக்குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இத்திட்டத்தை கொண்டு வரும் நிலையில் நங்கவள்ளி, ஓமலூர், தாரமங்கலம், கொங்கணாபுரம், எடப்பாடி, சங்ககிரி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்புவதால் உபரிநீர் அரை டிஎம்சி அளவிற்கு சேமிக்கப்படும். இத்திட்டம் மூலம் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாகவும், நிலத்தடி நீர் பாசனத்தின் வழியில் பாசன வசதி பெற்று பயன்பெறும். இதன்மூலம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற கோரிக்கை முன்வைத்துள்ளனர். எனவே உடனடியாக மேட்டூர் சரபங்கா வெள்ள உபரிநீர் இத்திட்டத்தின் மூலமாக உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.