

நடிகர் விஜய்சேதுபதியை தனித்துவமாக காட்சிப்படுத்தி “தி ஆர்டிஸ்ட்” என்ற தலைப்பில் அசத்தலான காலண்டரை உருவாக்கியிருக்கிறார் புகைப்பட கலைஞர் ராமசந்திரன்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் சர்வதேச தரத்திலான ஒரு புகைப்பட தொகுப்பை உருவாக்கி, அதனை மாதாந்திர நாட்காட்டியாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.
முந்தைய ஆண்டுகளில் “ஹூயூமன்”, “கலைஞன்” ஆகிய தலைப்புகளில் விஜய் சேதுபதியை தனித்துவமாகக் காட்சிப்படுத்திய எல். ராமசந்திரன் இந்த ஆண்டும், தொடர்ந்து மூன்றாம் முறையாக அவரோடு இணைந்து, ஒரு படைப்பாளியை பின்புலமாகக் கொண்ட “தி ஆர்டிஸ்ட்” என்ற தலைப்பில் காட்சிகளை வடிவமைத்து,
அதனை 2023-ம் ஆண்டுக்கான மாதந்திர நாட்காட்டியாய் வடிவமைத்திருக்கிறார்.ஓவியர், சிற்பி, கிராபிடி ஆர்டிஸ்ட் என பல பரிமாணங்களில் விஜய் சேதுபதியை புகைப்படம் எடுத்து, அதனை வண்ணமயமான நாட்காட்டியாக உருமாற்றியுள்ளார் சர்வதேச புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன்.இந்த படைப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக உழைத்து 12 கண்கவர் செட்டுகளை, ஒவ்வொன்றையும் தனித்துவமான தலைப்பில் (Theme) வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“கலையும் கற்பனையும், பல சமூக மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது பல முன்னெடுப்புகளுக்கு ஆதாரமாய் இருந்துள்ளது; பலரையும் மகிழ்வித்து வருகிறது; அவ்வாறான எல்லா கலைஞர்களுக்கும் இந்த “ஆர்டிஸ்ட்” சமர்ப்பணம்” என குறிப்பிடும் எல் ராமசந்திரன், அயராத பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் இந்த கருத்துப்படிவத்திற்காக (கான்செப்ட்) உடனே நேரம் கொடுத்த விஜய் சேதுபதிக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய பணிகளில் முழு அர்ப்பணிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயலாற்றும் நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு. இந்த படத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு தலைப்பிற்கும், அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை அணுகி, அதன் நுணுக்கங்களை உள்வாங்கி, அந்தந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றியிருக்கிறார் விஜய் சேதுபதி என்பதை நீங்கள் முதல் பார்வையிலேயே உணரலாம். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், இத்தொகுப்பு ஒரு மாறுபட்ட – புதிய பாணியில் இருப்பதை நீங்கள் உணரலாம். சர்வதேச தரத்தில், ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு புகைப்படங்கள் என 24 புகைப்படங்களோடு, அழகுற வடிவமைக்கபட்டுள்ள இந்த நாட்காட்டி, உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் அழகாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
கடந்த 2021ம் ஆண்டு கோவிட் ஊரடங்கு சமயத்தில் “HUMAN”, 2022ம் ஆண்டு “கலைஞன்” என்று தெருக்கூத்து கலைஞர்களை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்ட நாட்காட்டி ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.இம்முறை “தி ஆர்டிஸ்ட்” நாட்காட்டி விற்பனைக்கு வருகிறது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய், காசா அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ நலன்களுக்காக பயன்படுத்தப்படும் என்பதையும் இத்தருணத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.வண்ணமயமாய் வாஞ்சையுடன் ஜொலிப்பான் இந்த “ஆர்டிஸ்ட்”.
ஆர்டிஸ்ட் காலண்டர் store.lramachandran.com, அமேசான் போன்ற இணையதளங்களிலும் மற்றும் முன்னணி புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது!

- அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது.., ஆளுநர் ஆனந்த ஜோதி..!தோப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது ஆளுநர் ஆனந்த ஜோதி… Read more: அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது.., ஆளுநர் ஆனந்த ஜோதி..!
- கனவுகள் மெய்ப்பட 23 எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி…கோவை குரும்பபாளையம் ஆதித்யா கல்வி குழுமம் சார்பாக கல்வி பயிலும் மாணவ,மாணவிகள் பயன்பெறும் விதமாக கனவுகள்… Read more: கனவுகள் மெய்ப்பட 23 எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி…
- திருப்பதியில் பிரதமர் மோடி தரிசனம்..,
- பிரதமர் மோடி திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசன காட்சிகள்…
- அரசு உதவி பெறும் பள்ளியை, தனிநபருக்கு பெயர் மாற்றம் செய்து மோசடி…தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை முத்துராஜா தெருவில் இயங்கி வருகிறது நாடார் நடுநிலைப்பள்ளி, இப்பள்ளியில் ஒன்றாம்… Read more: அரசு உதவி பெறும் பள்ளியை, தனிநபருக்கு பெயர் மாற்றம் செய்து மோசடி…
- குறிச்சி பகுதியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை சில நாட்களில் திறக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்…கோவை மாநகராட்சி ரேஸ் கோர்ஸ் மற்றும் சுங்கம் பகுதியில் தனியார்(GKNM Hospital) பங்களிப்புடன் தமிழர்களின் கலாச்சாரத்தை… Read more: குறிச்சி பகுதியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை சில நாட்களில் திறக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்…
- காந்தி சிலை உடைப்பு.., கம்பம் நகரில் பரபரப்பு…தேனி மாவட்டம் கம்பம் நகரில் குமுளி தேனி தேசிய நெடுஞ்சாலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டு உள்ளது.… Read more: காந்தி சிலை உடைப்பு.., கம்பம் நகரில் பரபரப்பு…
- விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு.., பார்வட் ப்ளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம்…செல்லம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு செய்து வருவதாக குற்றம்… Read more: விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு.., பார்வட் ப்ளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம்…
- “நாடு” திரை விமர்சனம்எம் சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், நடித்து வெளிவந்த திரைப்படம் “நாடு”. இத் திரைப்படத்தில்… Read more: “நாடு” திரை விமர்சனம்
- திமுக ஆட்சியில் கிணற்றில் போட்ட கல்லாக மதுரை டைட்டில் பார்க்.., சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!திமுக ஆட்சியில் மதுரையில் அறிவித்த டைட்டில் பார்க் கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருக்கிறது என அதிமுக… Read more: திமுக ஆட்சியில் கிணற்றில் போட்ட கல்லாக மதுரை டைட்டில் பார்க்.., சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!
- சிறுவர் உட்பட ஐந்து பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் இருவர் கைது..,மதுரை பெருங்குடி பகுதியில் சிறுவர் உட்பட ஐந்து பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் இருவர் கைது.… Read more: சிறுவர் உட்பட ஐந்து பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் இருவர் கைது..,
- வட மாநில தொழிலாளி கொலை… ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை..,மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் பகுதியில் அரசு காசநோய் மருத்துவமனை உள்ளது இங்கு புதிய… Read more: வட மாநில தொழிலாளி கொலை… ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை..,
- வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்தை துவக்கி வைத்த முதலமைச்சர்..!தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read more: வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்தை துவக்கி வைத்த முதலமைச்சர்..!
- நற்றிணைப் பாடல் 308:செல விரைவுற்ற அரவம் போற்றி,மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழையாம் தற் கரையவும், நாணினள்… Read more: நற்றிணைப் பாடல் 308:
- பொது அறிவு வினா விடைகள்