அரியலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை மற்றும் அட்டூழியம் தாங்காமல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர் SC/ST மற்றும் வருவாய்த்துறை சங்கம் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

சமூக நீதி காக்கும் திராவிட ஆட்சி கழகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் ரமண சரஸ்வதி என்ற அரியலூர் மாவட்ட ஆட்சியர் செய்யும் அராஜகம் பொறுக்க இயலாது தாழ்த்தப்பட்ட சமுதாய அதிகாரிகளை குறிவைத்து தனது அதிகாத்தை காட்டி வருகிறார். தாழ்த்தப்பட்ட அதிகாரிகளை ஒருமையில் அழைப்பது நிற்க வைத்து பேசுவது. உருவ கேளிக்கை அனனவரும் உள்ள அதிகாரிகள் கூட்டத்தில் நீங்கள் பதவிக்கே தகுதியற்றவர்கள் எனக் கூறுவது.கூட்டத்திற்கு தாமதமாக வந்தார் என சிறிய சிறிய அற்ப காரணங்களை கூறி தற்காலிக பணி நீக்கம் செய்வது. 17 B குற்றச்சாட்டு ஏற்படுத்துவது. கூட்டத்தை விட்டு அனைவரின் முன்னிலையில வெளியேற்றுவது என தாழ்த்தப்பட்ட அதிகாரிகளை தரக்குறைவாக நடத்தி வருகிறார். இவரது அதிகாரப் போக்கால் பாதிக்கப் பட்ட வட்டாட்சியர் ஆதிதிராவிட நலத்துறை தேன்மொழி தற்கொலை முயற்சி மேற்கொண்டு காப்பாற்றப்பட்டார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயங் கொண்டம் அவர்களை கை நீட்டி அறைய ஓங்கி விட்டார். மாவட்ட நிலை அலுவலர் ஒருவரின் கோப்பை தூக்கி வீசினார். இவரது சாதிய போக்கால் ஒரு செயல் அலுவலர் மன நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில உள்ளார். இவரால் பேசப்படும் வார்த்தைகள் அச்சில் எழுத முடியாத அசிங்க மானவை.காவல் அதிகாரிகளை அவர் மிகவும் கேவலப்படுத்தி வருகிறார் இவரும் காவல் கண்காணிப்பாளரும் எதிர் எதிர் துருவங்கள் அனைத்து அதிகாரிகளையும் விட இவரின் தினசரி பொழுது போக்குகிற்கு ஆளாகும் விஷ்ணு பிரியாக்கள் ஏராளம். தினம் தினம் ஒரு தாழ்த்தப் பட்ட அலுவலரை இவரும் இவரது உதவியாளர் நிலம் பிரபாகர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் கேளி கிண்டல் செய்து சந்தோசம் அடைவார்கள். இவர்களிடம் மாட்டி கொண்ட பெண் அதிகாரி மனநிலை பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருகிறார். இவரது நடவடிக்கை சாதீய வன்மம் தூண்டுதல் போல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.







; ?>)
; ?>)
; ?>)