• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விடுதலைசிறுத்தை கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர், நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டு வர கோரிக்கை…

விடுதலைச் சிறுத்தை கட்சி நாகர்கோவில் மாநகர் மாவட்டம் சார்பாக, செயர் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிதாக குன்னுவிளை மற்றும் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட நபர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்தனர். கூட்டத்தில் ஜனவரி மாதம் நான்காம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோரிக்கைகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்து வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தவும், தமிழக அரசு கேட்ட 21 ஆயிரம் கோடியை உடனடியாக மத்திய அரசு வழங்கவும் மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை பேரிடர் பகுதி என அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையிலும் மண்டல துணைச் செயலாளர் திருமாவேந்தன் மற்றும் முன்னணி பொறுப்பாளர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டனர்.