• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஆதிபுத்திங்கொண்ட அய்யனார் கோவில் ஆனி முப்பழ பூஜை…

ByRadhakrishnan Thangaraj

Jul 10, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்துார் அருள்மிகு ஆதிபுத்திரங்கொண்ட அய்யனார் சுவாமி கோயிலில் ஆனி
முப்பழ அபிஷேக திருவிழா வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இராஜபாளையம் அருகே சேத்துாருக்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குலதெய்வ வழிபாடுசெய்யும் இந்து நாடார் உறவின்முறை மஹாசபைக்கு பாத்தியப்பட்ட பூரணி, பொற்கொடி சமேத ஆதிபுத்திரங்கொண்ட அய்யனார்
சுவாமி, வீரமாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி முப்பழ அபிஷேக விழா சிறப்பாக நடைபெறுவது வழகக்கம்.

இந்தாண்டுவிழா வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜையுடன் துவங்கியது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமை காலையில்
மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் கோயில் முன்பொங்கல் வைத்தும் முடிக்காணிக்கை செலுத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இரவு 12 மணி முதல் மூலவர் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் முப்பழ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, நடைபெற்றது. சனிக்கிழமை காலை முப்பழ பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை தலைவர் மதுரை சந்திர மோகன் இணைச்செயலாளர் சிவகாசி சந்திரசேகர பொருளாளர் கொல்லம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் நிர்வாகக்
குழுவினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். மாநிலம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குடில்கள் அமைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்பட்டது.

சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இராஜபாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்