• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தவெக 2 வது மாநில மாநாடு யாகபூஜை..,

ByKalamegam Viswanathan

Jul 16, 2025

முன்னதாக கும்பங்கள் பூஜைக்கு தயார் செய்யப்பட்டு மதுரை பாண்டி முனீஸ்வரர், மடப்புரம் காளி, சமயபுரம் மாரியம்மன், கள்ளழகர் திருப்பரங்குன்றம் முருகன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தாலும் ஹைலைட்டாக எம்மதமும் சம்மதம் என்று குறிக்கும் வகையில் நடுவில் விநாயகர் மற்றும் வேளாங்கண்ணி மாதா குழந்தையுடன் மெக்கா படம் நடுவில் இடம் பெற்றது.

15 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் அவர்கள் பாதுகாப்பு வந்து பாதுகாப்பாக செல்லவே இந்த யாக பூஜைகள் நடைபெறுகிறது. அதில் அனைவரும் மந்திரங்கள் கூறுமாறு சிவாச்சாரியார் கூறினார்.

மதுரை பாரப்பத்தி பகுதியில் 237 ஏக்கர் பரப்பளவில் தவெக இரண்டாவது மாநில மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. வாகன பார்க்கிங்க்கு 217 ஏக்கர் ஒதுக்கப்பட்டு மாநாடுக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது.

மாநாடு நடத்துவதற்காக இன்று யாக பூஜை முடிந்தவுடன் காலை 7:00 மணிக்கு தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் வந்த கால்நடை நிகழ்வு நடைபெற்றது இதில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்றனர்.

விஜயின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இது குறித்து பொதுச்செயலாளர் ஆனந்திடம் கேட்டபோது மாநாடு தேதி தலைவர் விஜய் அறிவிப்பாளர் தெரிவித்துவிட்டு சென்றார்.

தென் மாவட்டங்களில் பலத்தை நிரூபிக்க விஜய் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார். மதுரையில் முதல்வர் ரோட் ஷோ தொடங்கி அமித்ஷா தென் மாவட்ட நிர்வாகிகளும் ஆலோசனைக் கூட்டம் இந்து முன்னணி முருக பக்தர்கள் மாநாடு என மதுரையில் தொடர்ச்சியாக அனைத்து கட்சியினரும் மாநாடு நடத்தி வந்த நிலையில் தற்போது தவெக மாநாடு நடத்த உள்ளது. மதுரையை குறிவைத்து அனைத்துக் கட்சியும் மாநாடு நடத்தப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி வருகிறது.