தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்றது.
தென்காசி மாவட்டத்திலுள்ள 466 குளங்களில் 320 குளங்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் தென்காசி மாவட்டத்திலுள்ள அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம், ராமநதி, கருப்பாநதி, கடனாநதி, குண்டாறு ஆகிய 5 நீர்தேக்கங்களுக்கு வனப்பகுதிகளில் இருந்து வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே குண்டாறு நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்த நிலையில் அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கத்தில் தொடர் மழையின் காரணமாக முழு கொள்ளளவான 132 அடியை எட்டி மறுகால் விழத்தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததுள்ளனர். மேலும் 100-கன அடி நீர் வனப்பகுதியிலிருந்து வந்து கொண்டு இருக்கிறது.
அந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.மேலும் நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் வெள்ளநீர் ஆறுகளில் செல்வதால் கரையோரமக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.