• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

உலக பட்டினி தினம் சாலமங்கலத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தவெக நிர்வாகிகள்..,

ByPrabhu Sekar

May 28, 2026

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தங்குதடையின்றி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில், ஏழை மக்களின் பசியை போக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான தென்னரசு ஆலோசனையின் பேரில், ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கோ.டேவிட் மற்றும் கலைச்செல்வி ஏற்பாட்டில் சாலமங்கலம் பகுதியில் மதிய நேரத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரகாஷ், மனோத்தா, ரவி, அன்பரசு, அஸ்வின், பிரதீப், சதீஷ், கௌதம் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.