

ஸ்டோனெக்ஸ் பேனரில் பி பி வேல்முருகன் தயாரித்து ராம் பிரபா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “தரைப்படை”.
இத்திரைப்படத்தில்
பிரஜின், விஜய் விஷ்வா,ஜீவா தங்கவேல் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதை இரட்டிப்பாக தருவோம் என்று கூறி பொது மக்களிடம் மோசடியில் ஈடுபடும் ஒரு கும்பல்.

மோசடி செய்த 1000 கோடி ரூபாய் பணத்தை தங்கம் மற்றும் வைரங்களாக மாற்றிக் கொள்கிறது. அந்த மோசடி கும்பலின் தலைவரை கொலை செய்து விட்டு அந்த தங்கத்தையும், வைரங்களையும் பிரஜன் கொள்ளையடிக்கிறார்.
பிரஜனிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தையும் வைரத்தையும் விஜய் விஷ்வா கொள்ளையடிக்கிறார். இன்னொரு பக்கம், மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தை தேடி கொண்டிருக்கும் ஜீவா மோசடி கும்பலின் தலைவனை காப்பாற்றி தனது குடும்பத்தை பற்றி விசாரிக்கும் போது மோசடி கும்பல் தலைவன் பல உண்மைகளை காக்கிறார்.
விஷயத்தை தெரிந்து கொண்ட ஜீவா தனது குடும்பத்தை கொலை செய்த மோசடி கும்பல் தலைவனையும் அவரது குடும்பத்தையும் பழிக்கு பழியாக கொலை செய்துவிட்டு அவரும் அந்த1000 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார்.
இந்த 3 பேரில் யாருக்கு அந்த 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரங்கள் கிடைக்கும்? இதனால் அவர்கள் சந்திக்கும் பாதிப்புகள் என்னென்ன? என்பது தான் படத்தை மீதி கதை.

பிரஜன் படம் முழுவதும் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்துள்ளார்.
லொள்ளு சபா ஜீவா, படம் முழுவதும் பாட்ஷா படத்தில் வரும் ரஜினி போலவே தன்னை நினைத்துக் கொண்டு படம் முழுக்க வலம் வருகிறார். விஜய் விஷ்வா படம் முழுவதும் துப்பாக்கியும் சிகெரட்டுமாக வலம் வருகின்றார்.
ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம் காட்சிகள் அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போலவே படம் பிடித்துள்ளார்.
இசையமைப்பாளர் மனோஜ்குமார் பாபுவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
இயக்குனர் ராம் பிரபா “உன்கிட்ட இருக்கிற மெட்டல் வேற என்கிட்ட இருக்குற மெட்டல் வேற ” என்று பிரஜன் கூறும் டயலாக்கும் அவரது தாடி வைத்த அந்தக் கெட்டப்பும் பார்க்கும் போது ஏற்கனவே இந்த டயலாக்கை பொது மேடையில் பேசிய அந்த அரசியல் கட்சி தலைவரை நினைவு படுத்தியது போல் பார்வையாளர்கள் மத்தியில் தோன்றியது.
மொத்தத்தில் ‘தரைப்படை’ வெற்றிப்படையாக வாகை சூடும் .

