அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சிவகங்கை நகர் திமுக நகரச் செயலாளர் ஆனந்த் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் சார்பில் திமுக நகர் கட்சி அலுவலகத்தில் சிவகங்கை நகர செயலாளர் துரை ஆனந்த் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் பெரியகருப்பு ஆலோசனையின் படி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்து பணிகளை ஒவ்வொரு வட்ட செயலாளர்களும் மற்றும் அனைத்து திமுக தொண்டர்களும் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் நகர அவைத் தலைவர் மதரார், நேர் மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன் , வீனஸ் ராமநாதன், அயுப்கான், வீரகாளை, ராமதாஸ் ஏராளமான நகர கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .




