தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது … அன்னை தந்தை குரு கடவுளுக்கு நன்றி….
இந்த எட்டாண்டடுகளில் அபிசரவணன் , விஜய்விஷ்வா ஆகிய எனக்கு ஆதரவையும் அன்பையும் அளவில்லாமல் வழங்கி் கொண்டிருக்கும் அனைத்து மீடியா நண்பர்களுக்கு அண்ணண்களுக்கு சமூகவலைதள அன்பர்களுக்கு எனது நன்றிகள்…
முதல்பட இயக்குனர் சரவணசுப்பையா, சுமா பிக்சர்ஸ், mrsanushakumaran ஆகியோருக்கு நன்றியை காணிக்கையாக்குகிறேன் ..வெள்ளித்திரையில் துணை நடிகராக கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்த அட்டக்கத்தி இயக்குனர் பா.ரஞ்சித் , துணை கதாபாத்திரத்தில் வாய்ப்பளித்த குட்டிப்புலி இயக்குனர் முத்தையாவுக்கு நன்றிகள்..அதற்கு வித்திட்ட பாடலாசிரியர் வசனகர்த்தா முருகன் மந்திரம் அண்ணாவிற்கும் மனமார்ந்த நன்றிகள் .என்னை சரியான நேரத்தில் இப்படத்திற்கு தேர்வாக உதவிய Mysixer உரிமையாளரும் பத்திரிக்கையாளரும் இயக்குனருமான கே. விஜய் ஆனந்துக்கு மனமார்ந்த நன்றிகள்.வழிகாட்டிய டாட் சங்கர் கிருஷ்ணமூர்த்திக்கு நன்றிகள்.
துணைநின்ற நண்பரகளுக்கு பத்து முனி சுரேன் சாரு ,சிவம் அங்கிளுக்கு நன்றிகள்..சன்னல்கே.எஸ்.கே. செல்வாவுக்கு நன்றிகள்இதுவரை எனக்கு வாய்ப்பளித்த இனி வரும் காலங்களில் வாய்ப்பு வழங்க இருக்கும் அனைத்து இயக்குனர்களுக்கும் உடனிருந்த உதவிஇயக்குநர் அனைவருக்கும் நன்றிகள். இதுவரை வாழ்வளித்த இனியும் வழங்க இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களும் நன்றிகள்..தனது தனித்துவமான பார்வையில் என்னை எனக்கே அழகாக காட்டிய இனியும் காட்ட இருக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கும் உதவியாளர்கள் நன்றி.அனைத்து சினிமா மற்றும் பத்திரிகை மக்கள்தொடர்பாளர்கள் நன்றிகள்..அனைத்து தயாரிப்புநிர்வாகிகளுக்கு நன்றிகள்..அனைத்து துணை நடிகர்கள், மேனேஜர்கள்,அனைத்து படத்தொகுப்பாளர் களுக்கும் நன்றிகள்..அனைத்து ஒப்பனைகலைஞர்கள் நன்றிகள்..
அனைத்து புகைப்படகலைஞர்கள் ,அனைத்து நடனஇயக்குனர் உதவியாளர்கள் ,அனைத்து சண்டைஇயக்குனர் உதவியாளர்கள் ,அனைத்து இதர சினிமாத்துறை சேர்ந்த பெப்ஸி னநண்பர்கள் அண்ணன்கள் நன்றிகள்.இத்தனை பேர் சேர்ந்து உருவாகும் இந்த படைப்புகள் மக்களுக்கு சென்றடைய உதவும் திரையரங்குகளில் தொலைக்காட்சி குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றிகள்….நல்ல சினிமாவை கொண்டாடும் ரசிகர்களாகிய உங்களை நம்பி இன்றும் எனக்காக இடத்தை தேடி கொண்டு இருக்கிறேன்..நம்பிக்(கைக்கட்டுடன்)
என தனது எட்டு வருட திரைபயணத்தில் தான்பணியாற்றிய , தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கு ம் நன்றிகளை தெரிவித்து புதிய நம்பிக்கையுடன் தனது திரைபயணத்தை துவங்குவதாக விஜய்விஷ்வா அறிவித்துள்ளார்.