நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தேர்வு செய்யப்பட்டது விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமையானது என மாணக்கம் தாகூர் எம்.பி. பேட்டி
விருதுநகர் அருகேயுள்ள வடமலைக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிதியமைச்சராக தங்கம்தென்னரசு பொறுப்பேற்று இருக்கிறார். தங்கம்தென்னரசு நிதியமைச்சர் ஆனது விருதுநகர் மாவட்டத்திற்கு மிகவும் பெருமையானதாகும். விருதுநகர் மாவட்டத்திற்கு முதன்மையான திட்டங்கள் வருவதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நாளை, கர்நாடகா மாநில தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும். கர்நாடகா தேர்தல் முடிவுகளுக்கு பின்பு, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் விரைவு படுத்தப்படும். காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்றினைந்து, மதவாத மற்றும் பாசிச ஆட்சி நடத்தி வரும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என்று பேசினார். உடன் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சிசுந்தரம், மாவட்ட கண்காணிப்பு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உட்பட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.