• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தக்லைஃப் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாட்டம்..,

ByAnandakumar

Jun 5, 2025

நடிகர் கமல்ஹாசன் தக்லைஃப் திரைப்படம் இன்று கரூரில் நான்கு திரையரங்கில் வெளியாகியுள்ளது: ரசிகர்கள் தேங்காயில் சூடம் ஏற்றி சுத்தி உடைத்து நடனமாடி உற்சாக கொண்டாட்டம்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு திரையரங்குகளில் இன்று வெளியானது. அது ஒரு பகுதியாக திண்ணப்பா திரையரங்கில் வெளியான படத்திற்கு 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மேல தாளங்கள் முழங்க நடனமாடியும் திரையரங்கம் முன்பு கமல் கட்டவுட்டிற்கு தேங்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி சுத்தி பிறகு உடைத்தும் உற்சாகமாக கொண்டாடினர்.