இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் வழங்கினார்.
சுதந்திர தினத்தையொட்டி 2022 ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் வழங்கினார். விருதுடன் அளிக்கப்பட்ட ரூ.10 லட்சத்துடன், தன்னுடைய நிதியான ரூ.5 ஆயிரத்தையும் அவர் அரசுக்கு வழங்கினார்.