விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில், இன்று தை தமிழர் திருநாளை முன்னிட்டு அரசு சார்பில் சிறப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி முன்னிலையில் நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய திருநாளான தை தமிழர் திருநாளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அலுவலக வளாகம் பாரம்பரிய அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சக அரசு ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டு, தை திருநாளின் பண்பாட்டு மதிப்புகள், ஒற்றுமை, உழைப்பு மற்றும் நலன்கள் குறித்து கருத்துகளை பகிர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டு, அரசு அலுவலக சூழலில் பணியாளர்களிடையே உற்சாகமும் நல்லிணக்கமும் அதிகரிக்கும் வகையில் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு தமிழர் மரபையும் பண்பாட்டையும் அரசு பணியாளர்களிடையே பரப்பும் நோக்கில் அமைந்ததாகக் குறிப்பிடத்தக்கது.




