

கோவையில் தனியாருக்கு சொந்தமான கார் உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இராமநாதபுரம் ஸ்ரீபதி நகரில் கார் உதிரிபாகங்கள் விற்பனை குடோனில் இந்த பயங்கர தீ விபத்து நடந்துள்ளது. 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் குறித்து இன்னும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.