• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மரம் அறுக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து..,

ByS.Navinsanjai

Apr 29, 2025

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணா நகர் பகுதியில் பரத் பட்டேல் என்பவர் சொந்தமாக மரம் அறுக்கும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடிந்து அவர் வீடு திரும்பிய நிலையில் திடீரென அதிகாலை இரண்டு மணி அளவில் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ ஆலை முழுவதுமாக பரவி மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதில் ஆலையில் வைக்கப்பட்டிருந்த மரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அண்ணா நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.