மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் உள்ள பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து, தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை முனிச்சாலை பகுதியை அடுத்த ஓபுளாபடித்துறை வைகை ஆற்று தென்கரை பகுதியில் பல்வேறு குடியிருப்புகளும், இறைச்சி கடைகளும், மரக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் செயல்பட்டு வந்த பேப்பர் குடோனில் கடையில் நின்று கொண்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தொடர்ந்து தீயானது டாட்டா ஏசியில் இருந்து பேப்பர் குடோன் முழுவதும் பற்ற துவங்கி பயங்கரமாக எரிய துவங்கியது,

எதிர்பாராத விதமாக திடீரென பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் இருந்த மக்கள் அச்சத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து தீ விபத்து சம்பவம் குறித்து, மதுரை அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து, மதுரை தெப்பக்குளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேப்பர் குடோன் நின்று கொண்டிருந்த tata ace யாரோ தவறுதலாக தீக்குச்சியை வீசி இருக்கலாமோ என்று இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கும் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
தொடர்ந்து தல்லாகுளம் பெரியார் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.