தென்காசி மாவட்டத்தில், முதல் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. 33 வார்டுகளில் அமைக்கப் பெற்ற 82 வாக்குசாவடிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, 22ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது. 33 உறுப்பினர்களுக்காக 176 பேர் களத்தில் நின்றனர். கடையநல்லூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் செயல்பட்டார். நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் நகராட்சி சார்பிலும், பள்ளி கல்வித் துறையில் உதவி தொடக்க கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் வேளாண்மை அலுவலர் சரவணன் ஆகியோர் உதவி தேர்தல் அலுவலர்களாகவும் பணியாற்றினர்.
ஆணையர் மற்றும் தேர்தல் அலுவலர் ரவிச்சந்திரன் ஆலோசனையை ஏற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் துவங்கிய நாளிலிருந்து அத்தனை பணிகளையும் நின்று கவனித்து கடையநல்லூர் மக்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குசாவடி அலுவலர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துநிறை குறைகளையும் சரி செய்ததில் உதவி தேர்தல் அலுவலரும் நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமாரின் பங்கு முக்கியமானது.
8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்கை 3 மணி நேரத்துக்குள் 33 வார்டுகளின் முடிவுகள் தெரிவிக்கப்பட்டது. திமுக 15, மு.லீக் 5, அதிமுக 5, பாஜக 3, SDPI-1, அமமுக 1 மற்றும் 3 சுயேட்சை உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். கடையநல்லூர் நகர்மன்றம் இம்முறையும் தி.மு.க. தன் வசமாக்கி கொண்டது.
1984ல் டாக்டர் சஞ்சீவி (தி.மு.க),1996ல் செல்வி. விஜயசாந்தி (தி.மு.க) 2001ல் தாயம்மாள் (த.மா.க ) 2006ல் இப்ராஹிம் (இ.காங்கிரஸ்) 2011ல் ( திமுக ),ஷை புன்னிசா என நகர்மன்ற தலைவர்களை கண்ட கடையநல்லூர் நகராட்சி 2022 லும் திமுகவை சார்ந்தவரே தலைவராக வாய்ப்பு உள்ளது. மார்ச் 2ம் தேதி புதன்கிழமை நகர்மன்ற நுழைவு வாயிலையொட்டி மக்கள் முன்னிலையில் பதவியேற்கும் 33 மக்கள் பிரதிநிதிகளும் 4ம் தேதி காலை நடைபெறும் மறைமுக தேர்தலில் நகர்மன்ற தலைவரை தேர்வு செய்கின்றனர்.
பின்னர், மதியம் துணைக் தலைவரையும் தேர்வு செய்கின்றனர். எதிர்பார்ப்புகளுக்கிடையில் நகர்மன்றத் தலைவராக 25வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ( மூப்பன்) ஹபீபுர் ரஹ்மான் ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக உறுப்பினர்கள் 15 கூட்டணி கட்சியான மு.லீக் உறுப்பினர்கள் 5 சுயேட்சை உறுப்பினர்கள் 3 என 23 பேர் ஒரே அணியாக இருப்பதால் மீதமுள்ள அதிமுக 5 உறுப்பினர்கள் பாஜக 3 – SDPI -1 அ மமு க – 1 என மீதமுள்ள 10 உறுப்பினர்களில் தலைவர் பதவிக்கு முட்டி – மோத யாரும் தயாராகாத நிலையில் சுமூகமான சூழலில் போட்டியின்றி தேர்வாகி மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்திடவும் ஒளிவு மறைவற்ற முறையில் உள்ளாட்சியில் நல்லாட்சியில் நடைபெற பொதுமக்கள் விரும்புகின்றனர்

