• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

” உங்க கனவ சொல்லுங்க” என்ற விளம்பர பதாகைகள்..,

விருதுநகர், நகர் முழுவதும் ” உங்க கனவ சொல்லுங்க” என்ற விளம்பர பதாகைகள் அதிகம் தென்பட்டன. இதனை கண்ட நாம் பொதுமக்களிடம் சென்று விசாரித்த போது பலறும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

நாம் புகைப்படம் எடுக்க முயன்ற போது ஒருசிலர் வேண்டாம் என்று தவிர்த்து விட்டார்கள். இதில் முதலாவதாக ஆவின் பால் ஊழியர் ஒருவர் கூறுகையில் “தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும். மாதம் தலா ரூபாய் ஐந்து ஆயிரம் வழங்க வேண்டும், அதற்கு பதிலாக, ரேஷன் பொருட்கள், மற்றும் அனைத்து இலவசங்களையும் ரத்து செய்து விடலாம். தமிழகம் முழுவதும், தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் வேண்டும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு குறைத்து, அதே தொகையில் ஐந்து ஆசிரியர்கள் நியமனம் செய்யலாமென்றும்,பால் வள துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்த பட்சம் ஆறு ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

தற்போது இரண்டாயிரம், மூன்றாயிரம் வழங்கப்படுகிறது. பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக பட்ச சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதனை சற்று அதிகரித்து வழங்கலாம். என்று தனது உள்ளக்குமுறலை கொட்டினார்.சேக் இஸ்மாயில் கூறும்போது, பெட்ரோல் லிட்டர் 25 ரூபாய்க்கும், கேஸ் சிலிண்டர் 400 ரூபாய்க்கும்,டீ இரண்டு ரூபாய்க்கும்,அடுத்ததாக, குவாட்டர் 15 ரூபாய்க்கும், சிகரட் இரண்டு ரூபாய்க்கும் விற்பனை செய்ய வேண்டும் என்பதே எனது கனவாகும் இவை அனைத்தையும் நிறைவேற்றினால் தங்களுக்கு புண்ணியமாய் போகும் என்று தனது கனவினை நிறைவேற்றி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்ததாக புளியங்குளம் கிருஷ்ணன் கூறுகையில் ” ஐயா,தாங்களும் தங்கள் குடும்பமும் நாட்டை விட்டு செல்வதே எனது கனவு என்று கூறினார். இறுதியாக பாதுகாவலர் ( செக்யூரிட்டி) சவுந்தர பாண்டியன் ” ஐயா மாண்பு மிகு முதல்வர் அவர்களே,எனக்கு கனவே இல்லை என்று கூறி முடித்துக்கொண்டார்.