• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குழந்தையுடன் இளம்பெண் சாகசம்

Byவிஷா

Jun 27, 2024

இளம்பெண் ஒருவர் புடவை கட்டி, 2வயது குழந்தையுடன் சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெண்கள் பொதுவாக திருமணமானதும் தங்களது திறமையை மூட்டைக்கட்டி வைத்து விடுகின்றனர். இதில் தப்பியவர்களில் சிலர் குழந்தை பிறந்ததும் அவ்வளவுதான். குழந்தைகளுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். குடும்பச் சுழலுக்கேற்ப தங்களை மாற்றி கொள்கின்றனர். வெகுசிலரே அதில் இருந்து வெளிப்பட்டு தங்களது கனவுகளுக்காக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இளம் பெண் ஒருவர் தனது கையில் 2 வயது குழந்தையை வைத்துள்ளார். மற்றொரு கையில் 2 பாட்டில்களை வைத்து மேலே சுழலவிட்டு பிடித்து சாகசம் செய்கிறார்.
அதேபோல பாட்டிலில் தீப்பற்ற வைத்து அதையும் சுழலவிட்டு பிடிக்கிறார். இந்த சாகசத்தில் ஈடுபடும் போது அவர் புடவையே கட்டியிருந்ததும் ஆச்சர்யம். அந்த பெண் புனே நகரில் வசித்து வரும் கவிதா மேதார். அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 45 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.