சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை எட்டி உதைத்த உடற்பயிற்சி ஆசிரியர் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி.
கொளத்தூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், கால்பந்து போட்டியில் தோற்றதால் மாணவர்களை அண்ணாமலை எட்டி உதைக்கும் வீடியோ வைரலானது. இதனால் ஆசிரியர் அண்ணாமலை மீது கடும் கோபம் கொண்டுள்ள பெற்றோர்கள், சக மாணவர்கள் அறிவே இல்லாத ஆசிரியர் தான் இவர் என்று புகாரினை அனுப்பி நடவடிக்கை பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





