• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மண்டல பயிற்சி..,

ByK Kaliraj

Feb 21, 2026

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், கூட்டரங்கத்தில் வைத்து, மதுரை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மண்டல பயிற்சி மையத்தின் சார்பில், துணை ஆட்சியர் / இளநிலை நிர்வாக அலுவலர், திரு. எம். ரங்கசாமி தலைமையில், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் பகுதி அளவில் பணிபுரிந்து வரும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும்,

இரண்டாவது தொகுதி, மூன்றாவது அமர்வு பயிற்சி வகுப்பில், முதலுதவி மற்றும் அதனுடைய முக்கியத்துவம் பொருள் குறித்து, தலைமை பயிற்சியாளர்,பெஞ்சமின் இரண்டாவது தொகுதி, ஐந்தாவது அமர்வு பயிற்சி வகுப்பில் சுகாதார மேலாண்மை பொருள் குறித்தும் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் பொருள் குறித்தும், அமுதா
பயிற்சி அளித்தனர். மேற்படி பயிற்சி வகுப்புகளில், சுமார் 30 அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு முறையாகப் பயிற்சி பெற்றனர்.