• Fri. Apr 18th, 2025

தேசிய நில அளவை தின விழா செயற்குழு கூட்டம்..,

ByKalamegam Viswanathan

Apr 10, 2025

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே தேசிய நிலஅளவை தினவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மதுரை மாவட்ட மையத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ராஜ்குமார் தலைவை தாங்கினார். முத்து முனியாண்டி முன்னிலை வகித்தார். ரகுபதி பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர். ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு நினைவு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது முக்கிய தீர்மானமாக நில அளவையர்களுக்கு நீதிமன்ற பயிற்சி நிர்வாக பயிற்சி வழங்க வேண்டும் என்று தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

ஓய்வு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆசை தம்பி மாவட்ட செயலாளர் மணவாலன், ஜெயராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மணிரத்தினம் நன்றியுரை வழங்கினார்.