• Wed. Apr 24th, 2024

டேன் டீ பிரச்சனைகள்.., சட்டமன்ற பேரவை பொது நிறுவன குழு தலைவர் எஸ் ஆர் ராஜா உதகையில் பேட்டி…

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழகம் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைபொது நிறுவனங்கள் குழு ஆய்வு கூட்டம் சட்டமன்ற பேரவை பொது நிறுவன குழு தலைவர் எஸ்.ஆர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழகம் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைபொது நிறுவனங்கள் குழு ஆய்வு கூட்டம் சட்டமன்ற பேரவை பொது நிறுவன குழு தலைவர் எஸ்.ஆர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டமன்ற நிறுவன ஆய்வு குழு தலைவர், குன்னூர் பகுதியில் இயங்கி வரும் தமிழக அரசு டேன் டீ தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்துப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக
தெரிவித்த அவர், தமிழ்நாடு டேன்டீ தேயிலை தொழிற்சாலை நிர்வாகம் சுமார் 220 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சிங்காரா மின் உற்பத்தி நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள 150 மெகா வாட் மின் உற்பத்தி பணிகளை ஆய்வு மேற்கொண்டதாகவும், உதகையில் ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு தமிழகத்திலேயே முதல் முன்னுதாரணமான மாவட்டமாக திகழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் எஸ்.பி அம்ரித், சட்டமன்ற பேரவை குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *