• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தமிழர்கள் ஒருங்கிணைந்து ராஜபக்‌ஷேவுக்கு எதிராக வழக்கு – விசிக வரவேற்பு…

Byமதி

Oct 28, 2021

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் புலம்பெயர் தமிழர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்துள்ளமையை வரவேற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Global Rights Compliance LLP (GRC) என்ற சட்டவல்லுனர் அமைப்பு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.