

பழனி மலை முருகன் கோவிலில் செயல்பட்டு வருகின்ற ரோப் கார் சேவை நாளை(29-10-2021) ஒருநாள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
பழனி மலைக் கோயில் “ரோப்கார்” வயதானவர்கள் மற்றும் மலை ஏற இயலாத பக்தர்களுக்காக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்பட உள்ளது. இதில் மாதாந்திர பராமரிப்பு பணியில் உருளைகள், கம்பிவடம், பெட்டிகளை கழற்றி ஆயில், கிரீஸ் இட்ட பின் ஒவ்வொரு பெட்டிகளிலும் குறிப்பிட்ட அளவு எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெறும்.
