

சங்க காலத்திலிருந்து சேர, சோழ, பாண்டிய நாடுகளாகவும், பின்னர் பல்வேறு வகையிலும் பிரிவுப்பட்டுக் கிடந்த தமிழ்நாடு முதன்முதலாக 1956ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் ஒன்றுபட்டத் தமிழகமாகப் பிறந்தது. இந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டியது தமிழர்கள் அனைவரின் கடமையாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழ்நாடு பிறந்த நவம்பர் முதல் நாளை சிறப்பாகக் கொண்டாடும்படி அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன் என பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
