

அகில இந்திய கட்டுமான தொழிலாளர்களின் தமிழகத்தின் 4-வது மாநாடு கடந்த (ஜூலை)7,8,9 தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற்றது.
தமிழ் நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர்களின் முதல் மாநாடு கடந்த 2003_ம் ஆண்டு ஜூன் திங்கள் 15_ம் நாள் நெய்வேலியில் நடைபெற்றுள்ளது, 2வது மாநாடு 2011_ம் ஆண்டில் நாகர்கோவிலில் நடைபெற்றது அதனை தொடர்ந்து 3வது மாநாடு 2015 ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடைபெற்றது. 4வது மாநாடு இப்போது கன்னியாகுமரியில் நடைபெற்று வருவதற்கு இடையே 7வருடங்கள் என நீண்ட இடைவெளிக்கு காரணம் இடையே வந்து போன கொரோனா என்ற பெரும் தொற்றே காரணம்.

இந்த சங்கம் 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இதன் நோக்கம் எந்த சங்கங்களுக்கும் எதிராக, எதிரியான சங்கம் அல்ல. உழைக்கும் தோழர்களின் உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்பதே நமது சங்கத்தின் நோக்கம்.
கடந்த 9ஆண்டுகளாக நடக்கும் மோடி அரசின் செயல் முறை இந்திய தொழிலாளர்கள் என்னும் பெரும் மக்கள் இடையே ஒற்றுமை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற பிரித்தாளும் சிந்தனையே உயர்ந்து நிற்கிறது. மக்களவை தேர்தலில் பாஜகவை, கன்னியாகுமரி முதல், காஷ்மீர் வரையில் தோற்கடிக்கப்படவேண்டும். மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியா இதுவரை காப்பாற்றி வரும் ஜனநாயக உரிமைகள் மோடி அரசால் மறுக்கப்படும் என்பதை ஒவ்வொரு இந்தியனும் நினைவில் கொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி மாநாடு முடிந்து நாம் நமது சொந்த ஊர்களுக்கு போன பின்பு, நம் அன்றாட வாழ்வியல் பணிகளுக்கு மத்தியில், மக்கள் விரோத பாஜகவிற்கு எதிரான பிரச்சாரத்தை தினம் மேற்கொண்டு, இந்திய ஜனநாயக மாண்புகள் கால,காலத்திற்கு தொடர உழைக்கும் உறுதியை, கன்னியாகுமரியில் நடக்கும் மாநாட்டின் ஒற்றை தீர்மானம் என்ற உணர்வுடன் இங்கிருந்து கலைந்து செல்வோம் என உறுதி எடுத்துக் கொண்டார்கள்.

