• Wed. Sep 27th, 2023

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்… நாகர்கோவில் 0_கிரைம் அதிகாரி விசாரணை..!

சமூக வலைத்தளங்களில் கிறிஸ்தவ மதத்தை பற்றி அவதூறு வீடியோ பதிவு செய்த
இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநில தலைவர் மற்றும் சினிமா ஸ்டண்ட் பயிற்சியாளர் கனல் கண்ணன் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர்.

விசாரணைக்கு வந்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் காலை 10 மணிக்கு சைபர் கிரைம் அலுவலகத்தில் ஆஜராகியும், எந்த விசாரணையும் நடைபெறாமல் அலுவலகத்தில் உட்கார வைத்ததால் அவர் மதிய உணவிற்கு நிர்வாகிகளுடன் வெளியே வந்தார். வந்தவரை போலீசார் வெளியே செல்ல அனுமதிக்காததால்
போலீசருக்கும் கனல் கண்ணனுடன் வந்த இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு வாக்குவாதம் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. போலீசார் வலுக்கட்டாயமாக சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை மீண்டும் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *