

இளம் தலைவர் ராகுல் காந்தி மனுவை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை கண்டித்து மற்றும் பாஜக அரசு கண்டித்தும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் போலிங் பூத் காங்கிரஸ் பிரிவு சார்பில் நாகர்கோவில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் மாநிலச் செயலாளர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவி வதனா நிஷா, கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் வந்த தலைவர் முருகேசன், முன்னாள் மாநகரத் தலைவர் அலெக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

