• Sun. Feb 15th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

பட்டாசு உற்பத்தி தொழில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மனு அளித்த தமிழ் செல்வன்..,

ByK Kaliraj

Feb 15, 2026

குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து சமீபத்தில் மத்திய தொழில் துறை செயலாளர் அமிதீப் சிங் பாதியாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேரில் அளித்துள்ள இந்தியன் ஃபயர்வொர்க்ஸ் அசோசியேஷன் தலைவர் தமிழ் செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது,

பட்டாசு தொழில் தற்போது இக்கட்டான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, இதிலிருந்து மீண்டு வர மத்திய தொழில் துறை செயலாளர் அமிதீப் சிங் பாதியா மற்றும் தலைமை வெடிவிபத்து கட்டுப்பாட்டு அதிகாரியை நியூ டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

பட்டாசு தொழிலின் பெயர் அபாயகரமான மற்றும் ஆபத்தான தொழில் (“Dangerous and Hazardous”) என்ற வகைப்பாட்டில் இருப்பதால், இதுவரை தொழில்முறை அங்கீகாரம் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தத் தொழில் MSME பிரிவில் முழுமையாக சேர்க்கப்படாததுடன், பெரிய கார்ப்பரேட் துறையிலும் அங்கீகாரம் பெறவில்லை. மேலும் இந்த நிலைமையால் அரசாங்க உதவி, மானியம் (Subsidy), மற்றும் பல்வேறு நிதி ஆதரவு திட்டங்களைப் பெற முடியாமல் தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு வருவதற்காக மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்

சீனாவில் தயாரிக்கப்படும் வானவேடிக்கை பட்டாசுகளை போல் இந்தியாவிலும் தயாரிக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் அதற்கு சட்டத்தில் இடமில்லை, அதற்கான அனுமதி வழங்கினால் நாமும் உலகளாவிய ஏற்றுமதி சந்தையில் குறைந்தது ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட முடியும் என்பதையும் மத்திய தொழில்துறை செயலாளரிடம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்,

பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டால் பட்டாசு தொழிற்சாலைகளை நிரந்தரமாகவோ அல்லது காலவரையின்றி மூடும் நடைமுறையை மாற்றி, விபத்தின் தன்மையை ஆராய்ந்து உடனடியாக ஆலையை திறக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

24 மணி நேரமும் பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும், சிவகாசியில் அமைந்துள்ள பட்டாசு ஆராய்ச்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்தால் பசுமை பட்டாசு மற்றும் குறைந்த ஒலி எழுப்பும் பட்டசுகளை தயாரிக்க முடியும்.

மேலும் பேசிய அவர், உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பசுமை பட்டாசு என்பது உண்மையான பசுமை பட்டாசுகள் இல்லை, பெயரளவிற்கு மட்டுமே அது பசுமை பட்டாசுகள் எனவும் உண்மையாக அது பசுமை பட்டாசு கிடையாது எனவும் விதிமீறலும் உடந்தையாக உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

காற்று மற்றும் ஒலி மாசுவை கட்டுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட பசுமை பட்டாசுகளை தயாரிக்க தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) வழங்கியுள்ள ரசாயன கலவை நிரந்தர தீர்வாக அமையவில்லை, அவர்கள் வழங்கியுள்ள ரசாயன கலவை முடிவு வொர்க் அவுட் ஆகவில்லை

பசுமை பட்டாசில் பசுமை என்ற பெயர் மட்டுமே உள்ளது ஆனால் பசுமை இல்லை

சீனாவில் உள்ள பட்டாசு ஆலைகளை மத்திய அரசு அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்து அங்குள்ள நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பட்டாசு ஆலைகளை போல் சிவகாசியிலும் அமைக்க அனுமதி வழங்கினால் விபத்தில்லா பட்டாசு உற்பத்தியும், அதன் மூலம் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்

விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக தற்போது சுமார் 150க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளதாகவும், விதிமீறலை பொறுத்து நடவடிக்கை எடுத்து ஆலைகளை காலதாமதப்படுத்தாமல் திறந்து பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பட்டாசு தொழிலுக்கு அளவுக்கு அதிகமான ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தியுள்ளதுடன் தீபாவளி பண்டிகை நேரத்தில் வரி விலக்கு வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.