சாத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் அக்கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம்,இந்தியாவிலேயே தமிழகம் பொருளாதாரத்தில் முதல் மாநிலமாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தினகரன்,இந்தியாவிலேயே 90 சதவிகிதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதிலும்,சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

ஐயாயிரத்திற்கும்,பத்தாயிரத்திற்கும் ,கொலை கொலை செய்கின்ற கூலிப்படைகள் அதிகரிப்பதிலும் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்றார். இந்தியா,பாக்கிஸ்தான் போரில் அமெரிக்கா ஏன் மத்தியஸ்தம் செய்கிறது என திருமாவளவன் பேசியதற்கு பதிலளித்த தினகரன்,இந்தியா வல்லரசாக வளர்ந்து வரும் நாடு என்றும் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும்போது இந்த போர் உலகப்போராக மாறிவிடக்கூடாது,உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்ற பொதுநோக்கத்தோடு வல்லரசு நாடுகள் மத்தியஸ்தம் செய்வது இயல்பு என்றும் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் போரில் நமது பிரதமர் தலையிட்டு அமைதி நிலவ கோரிக்கை வைத்ததை போல் அமெரிக்காவும் தற்போது தலையிடுகிறது என்றார்.
பாக்கிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகளை அனுப்பி இந்திய மக்களுக்கு துன்புறுத்தல் கொடுத்தால் இந்தியா மீண்டும் பதிலடி கொடுக்கும் என பிரதமர் கூறியதை சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் தீயசக்தி திமுக வை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் கண்டிப்பாக ஒன்றிணையும் என்றும் அதிமுகவுடனான எங்களது சண்டைகளை எல்லாம் மறந்து திமுக வை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக 234 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பிரச்சாரத்தில் ஈடுபடும் என்றார்.
போர் நேரத்தில் கட்சி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கு ஆதரவு அளித்தைப்போல் தேர்தல் என்பது திமுகவை எதிர்த்து நடக்கிற ஜனநாயகப்போர்,தி.முக என்ற தீயசக்தி வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு எல்லா கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்றிணையும் என்றார்.