
நாட்டின் வெப்பம் அபாயம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 5ஆவது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தீவிர வெப்ப நிகழ்வுகளால் அதிக ஆபத்தை எதிர்கொண்டு வருகிறது. உலகளவில் 2024 இதுவரை இல்லாத வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது மற்றும் 2010-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா மிக நீண்ட வெப்ப அலையை எதிர்கொண்டது.
எரிசக்திஇ சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் நடத்திய சமீபத்திய ஆய்வின் படிஇ வெப்ப ஆபாயம் மிக அதிகமாகவுள்ள இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. குறிப்பாக சென்னை போன்ற நகரங்கள் உயர்ந்த வெப்ப நிலையால் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன.
உண்மையில்இ தமிழ்நாட்டின் எந்த மாவட்டமும் மிகக் குறைந்த அல்லது குறைந்த வெப்ப அபாய வகைகளின் கீழ் வரவில்லை. சுமார் 11சதவீத மாவட்டங்கள் மிதமான வெப்ப அபாயத்தையும்இ 43சதவீத மாவட்டங்கள் அதிக அபாயகரமானவை எனவும்இ 46சதவீத மாவட்டங்கள் மிக அதிக வெப்ப அபாய வகையிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது மாநிலத்தின் பெரும்பகுதி கடுமையான மற்றும் பரவலான வெப்ப பாதிப்பை எதிர்கொள்கிறது என்பதைக் காட்டுகிறது.
ஆய்வின்படிஇ கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மாவட்டங்களில் வெப்ப அலைகளின் காலம் 3 நாட்களுக்கு மேல் நீடித்துள்ளது. இது சுகாதாரம்இ விவசாயம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தாக்கங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை ஒவ்வொரு கோடைக்காலத்திலும் கூடுதலாக 4 “மிக வெப்பமான” இரவுகளை சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நகர்ப்புற வெப்ப தீவு விளைவு ஆகும். இதன் மூலம் நகரங்கள் இரவு வரை வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன.
எரிசக்திஇ சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் ஆய்வின்படிஇ 1981 முதல் 2022 வரையிலான தேசிய தரவுகள்இ மிகவும் வெப்பமான நாட்களை விட மிகவும் வெப்பமான இரவுகளின் நிகழ்வெண் வேகமாக அதிகரித்து வருவதைக் காட்டுகின்றனஇ குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் இது அதிகமாகக் காணப்படுகிறது. இந்த இரண்டு சொற்களும் வரலாற்றுப் பதிவுகளின் 95வது சதமானத்திற்கு அதிகமான வெப்பநிலையைக் குறிக்கின்றன. இந்தப்போக்கு எல் நினோ மற்றும் லா நினா போன்ற இயற்கை காலநிலை சுழற்சிகளால் பாதிக்கப்படுகிறது. உதாரணமாகஇ 1997 மற்றும் 2016 போன்ற வலுவான எல் நினோ ஆண்டுகளில்இ மிகவும் வெப்பமான நாட்களும் மிகவும் வெப்பமான இரவுகளும் கணிசமாக அடிக்கடி நிகழ்ந்தன.
வல்லுநர்கள் குறிப்பிடுகையில்இ உயரும் இரவுநேர வெப்பநிலை குறிப்பாக ஆபத்தானதுஇ ஏனெனில் வெப்பமான நாட்களுக்குப் பிறகு உடல் குளிர்ச்சியடைவதையும் மீண்டு வருவதையும் இது தடுக்கிறது. இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு சுகாதார அபாயங்களை அதிகரிக்கிறது.
பஞ்சாப்இ மேற்கு வங்கம்இ கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும்இ உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் அதிக காரணத்தால் வெப்ப பாதிப்பு மேலும் மோசமடைகிறது. இந்த நிலைமைகள் வெப்பம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றனஇ இது மாநிலத்தின் சுகாதார அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
வெப்ப அபாயத்திற்கான திட்டமிடலின்போதுஇ மாநிலங்கள்இ மாவட்டங்கள் மற்றும் நகரங்கள் பகல்நேர வெப்பநிலையில் மட்டும் கவனம் செலுத்துவதைத் தாண்டிஇ வெப்பமான இரவுகள்இ ஈரப்பதம்இ மக்கள்தொகை வடிவங்கள் மற்றும் சுகாதார பாதிப்புகள் போன்ற கூடுதல் பரிமாணங்களையும் உள்ளடக்க வேண்டும் என்று ஆய்வு பரிந்துரைக்கிறது.
